கைப்பந்து லீக்: சென்னை அணி முதல் வெற்றி


கைப்பந்து லீக்: சென்னை அணி முதல் வெற்றி
x
தினத்தந்தி 17 Feb 2024 8:00 PM GMT (Updated: 17 Feb 2024 8:00 PM GMT)

கைப்பந்து லீக் போட்டியில் சென்னை பிளிட்ஸ் அணி ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ் அணியை தோற்கடித்தது.

சென்னை,

9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை பிளிட்ஸ்-ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 16-14, 15-11, 15-7 என்ற நேர்செட்டில் ஐதராபாத்தை தோற்கடித்தது. சென்னை அணி வீரர் சமீர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆமதாபாத் டிபென்டர்சிடம் தோற்று இருந்த சென்னை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஆமதாபாத் டிபென்டர்ஸ்-கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் (மாலை 6.30 மணி), பெங்களூரு டார்படோஸ்-டெல்லி டூபான்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story