பாராசின் ஒபன் செஸ்: தொடரை வென்று அசத்தினார் பிரக்ஞானந்தா!


பாராசின் ஒபன் செஸ்: தொடரை வென்று அசத்தினார் பிரக்ஞானந்தா!
x

Image Courtacy: ANI

இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, பாராசின் ஒபன் செஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார்.

பாராசின் (செர்பியா),

பாராசின் ஓபன் செஸ் தொடர் செர்பியாவில் நடைபெற்றது. அதில் சக இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்ரி, லாசெசர் யோர்டானோவ் (பல்கேரியா), காசிபெக் நோகர்பெக் (கஜகஸ்தான்), சகநாட்டவரான கவுஸ்டாவ் சாட்டர்ஜி, அரிஸ்டன்பெக் உராசயேவ் (கஜகஸ்தான்) ஆகியோரை இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வென்றார்.

இந்நிலையில் மொத்தம் ஒன்பது சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 7 வெற்றி, 2 'டிரா' உள்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ரஷியாவின் அலெக்சாண்டர் பிரெட்கே, 7.5 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தார்.

இதனிடையே சென்னையில் வரும் 28ம் தேதி தொடங்க உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா 'பி' அணியில் பிரக்ஞானந்தா இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story