பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பாய்மரப்படகு வீரர் விஷ்ணு சரவணன் தகுதி


பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பாய்மரப்படகு வீரர் விஷ்ணு சரவணன் தகுதி
x
தினத்தந்தி 1 Feb 2024 3:15 AM IST (Updated: 1 Feb 2024 3:16 AM IST)
t-max-icont-min-icon

விஷ்ணு சரவணன் தொடர்ந்து 2 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி கண்ட முதல் இந்திய பாய்மரப்படகு வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

அடிலெய்டு,

உலக பாய்மரப்படகு சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் நடந்தது. இதில் சர்வதேச லேசர் கிளாஸ் பிரிவு பந்தயத்தில் 152 வீரர்கள் கலந்து கொண்டனர். இதன் 11 பந்தயங்கள் முடிவில் மொத்தம் 174 புள்ளிகள் குவித்த இந்திய வீரர் விஷ்ணு சரவணன் 26-வது இடத்தை தனதாக்கினார். இதன் மூலம் ஆசிய அளவிலான ரேங்கிங்கில் முன்னிலை பெற்ற விஷ்ணு சரவணன் பாரீசில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

வேலூரை சேர்ந்த 24 வயதான விஷ்ணு சரவணன் மும்பையில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். 21 வயதுக்கு உட்பட்ட உலக சாம்பியன்ஷிப் (2019-ம் ஆண்டு) மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் (2023) வெண்கலப்பதக்கம் வென்று இருக்கும் விஷ்ணு சரவணன் டோக்கியோ (2021) ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்று இருந்தார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பாய்மரப்படகு வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கும் விஷ்ணு சரவணன் தொடர்ந்து 2 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி கண்ட முதல் இந்திய பாய்மரப்படகு வீரர் என்ற சிறப்பையும் சொந்தமாக்கினார்.


Next Story