பள்ளி கைப்பந்து: லேடி சிவசாமி அணி அரைஇறுதிக்கு தகுதி


பள்ளி கைப்பந்து: லேடி சிவசாமி அணி அரைஇறுதிக்கு தகுதி
x

பள்ளி கைப்பந்து போட்டியில் லேடி சிவசாமி அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

சென்னை,

லட்சுமி நகர் மற்றும் பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பள்ளி அணிகளுக்கான (ஆண்கள் மற்றும் பெண்கள்) கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நங்கநல்லூர் லட்சுமி நகர் 7-வது தெருவில் உள்ள விளையாட்டு திடலில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்.

விழாவுக்கு வருமான வரி கூடுதல் கமிஷனர் எஸ்.பாண்டியன் தலைமை தாங்கினார். அமலாக்கத்துறை முன்னாள் கூடுதல் இயக்குனர் சந்திரசேகர், சுங்க இலாகா உதவி கமிஷனர் ஏ.அழகேசன், கவுன்சிலர் துர்காதேவி நடராஜன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

இதன் பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் லேடி சிவசாமி அணி 25-14, 25-20 என்ற நேர்செட்டில் பென்டிக் அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ஹெலன்ஸ் அணி 25-16, 25-14 என்ற நேர்செட்டில் எம்.பி.எல். அணியை வென்றது. லீக் ஆட்டம் முடிவில் லேடி சிவசாமி, பென்டிக், கூடுவாஞ்சேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. ஹெலன் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இதன் இறுதிப்போட்டி 29-ந் தேதி நடக்கிறது.


Next Story