ஆசிய குத்துச்சண்டை: கால்இறுதியில் ஷிவ தபா

ஆசிய குத்துச்சண்டை: கால்இறுதியில் ஷிவ தபா
x

ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்து வருகிறது.

அம்மான்,

ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்து வருகிறது.

இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 5 பதக்கம் வென்றவரான இந்திய வீரர் ஷிவ தபா தனது தொடக்க சுற்று ஆட்டத்தில் மங்கோலியாவின் பியாம்பேட்சோ துகல்தரை சந்தித்தார்.

பரபரப்பாக நகர்ந்த இந்த போட்டியில் இருவரும் தொடக்கம் முதலே தாக்குதலை தொடுத்தனர். தனது அனுபவம் மற்றும் வேகத்தை பயன்படுத்தி ஷிவ தபா 3-2 என்ற கணக்கில் பியாம்பேட்சோவை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார்.

Next Story