சின்க்பீல்ட் கோப்பை செஸ்: 4வது சுற்றில் பிரக்ஞானந்தா, குகேஷ் ஆட்டம் டிரா


சின்க்பீல்ட் கோப்பை செஸ்: 4வது சுற்றில் பிரக்ஞானந்தா, குகேஷ் ஆட்டம் டிரா
x

Image Courtesy: @FIDE_chess / Twitter

4வது சுற்று ஆட்டம் முடிவில் குகேஷ் 2 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், பிரக்ஞானந்தா 2 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளனர்.

செயின்ட் லூயிஸ்,

கிராண்ட் செஸ் டூரில் இந்த ஆண்டுக்கான கடைசி தொடரான சின்க்பீல்ட் கோப்பை அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 10 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி உடன் மோதினார். இந்த ஆட்டம் 33வது காய் நகர்த்தலின் போது டிரா ஆனது.

4வது சுற்றில் மற்றொரு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் குகேஷ், பிரான்சின் அலிரேசா பிரோஸ்ஜா உடன் மோதினார். இந்த ஆட்டமும் டிரா ஆனது. இந்த ஆட்டம் 73வது காய் நகர்த்தலின் போது டிரா ஆனது.

இந்நிலையில் 4வது சுற்று ஆட்டம் முடிவில் குகேஷ் 2 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், பிரக்ஞானந்தா 2 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளனர். தலா 2.5 புள்ளிகளுடன் அமெரிக்காவின் வெஸ்லி சோ, பிரான்சின் அலிரேசா பிரோஸ்ஜா ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

1 More update

Next Story