தென்மண்டல பல்கலைக்கழக கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி 'சாம்பியன்'


தென்மண்டல பல்கலைக்கழக கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்
x

தென்மண்டல பல்கலைக்கழக கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை,

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில் இறுதி லீக் சுற்றுக்கு 4 அணிகள் முன்னேறின.

நேற்று நடந்த லீக் சுற்றில் எஸ்.ஆர்.எம். அணி, சென்னை, மங்களூரு, கோழிக்கோடு ஆகிய பல்கலைக்கழகங்களை தோற்கடித்து 3 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் கோழிக்கோடு பல்கலைக்கழகம் 2-வது இடத்தை பிடித்தது. மங்களூரு பல்கலை. 3-வது இடத்தையும், சென்னை பல்கலை. 4-வது இடத்தையும் பெற்றன.

டாப்-4 இடங்களை பிடித்த இந்த அணிகள் ஜனவரி 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை மங்களூருவில் நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழக ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.


Next Story