பிரான்சில் நடந்த நோய்சியல் ஓபன் சதுரங்க போட்டி: ஈரோடு கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன்

பிரான்சில் நடந்த நோய்சியல் ஓபன் சதுரங்க போட்டி: ஈரோடு கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன்
பிரான்சில் நடந்த நோய்சியல் ஓபன் சதுரங்க போட்டியில் ஈரோடு கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஈரோட்டை சேர்ந்த இனியன் சதுரங்க (செஸ்) விளையாட்டில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராக உள்ளார். இவர் கடந்த 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பிரான்ஸ் நாட்டின் தலைவர் பாரீசில் நடந்த நோய்சியல் ஓபன் சர்வதேச சதுரங்க போட்டியில் கலந்து கொண்டார். இதில் 11 நாடுகளை சேர்ந்த சர்வதேச வீரர்கள் 52 பேர் கலந்து கொண்டனர். போட்டிகள் 9 சுற்றுகளாக நடந்தன. இதில் இந்தியாவின் சார்பில் விளையாடிய ஈரோடு இனியன் 5 சுற்றுகளில் வெற்றியும், 4 சுற்றுகளை சமனும் செய்தார். இதன் மூலம் 7 புள்ளிகளுடன் இனியன் முதல் இடத்தை பிடித்தார். அவருக்கு நோய்சியல் ஓபன் சதுரங்க போட்டியின் தலைவர் வெற்றிக்கோப்பை பரிசு வழங்கினார்.
இந்திய வீரர் சர்வதேச மாஸ்டர் என்.ஆர்.விக்னேஷ் 2-ம் இடமும், நார்வே நாட்டு வீரர் அலெக்சாண்டர் ஸ்ட்ரோம்பெர்க் 3-ம் இடமும் பிடித்தனர்.
இந்த தகவலை கிராண்ட் மாஸ்டர் இனியனின் தந்தை பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.






