காமன்வெல்த் போட்டிகளில் அனுமதி மறுக்கப்பட்ட குத்துச்சண்டை வீராங்கனையின் பயிற்சியாளருக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்க ஏற்பாடு; விளையாட்டுத் துறை அமைச்சகம்


காமன்வெல்த் போட்டிகளில் அனுமதி மறுக்கப்பட்ட குத்துச்சண்டை வீராங்கனையின் பயிற்சியாளருக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்க ஏற்பாடு; விளையாட்டுத் துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 25 July 2022 5:14 PM GMT (Updated: 27 July 2022 1:27 PM GMT)

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கச் சென்ற பயிற்சியாளர்களை நுழைய தடை விதித்து அங்குள்ள அதிகாரிகள் தடுத்ததாக வீராங்கனை குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

இங்கிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கச் சென்ற குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், பயிற்சியாளர் சந்தியா குருங் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் குழுவில் அவரது பயிற்சியாளர்களை நுழைய தடை விதித்து அங்குள்ள அதிகாரிகள் தடுத்ததாக வீராங்கனை குற்றம் சாட்டினார்.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 28ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.வீரர்கள் மற்றும் குழுவினர் தங்கியிருக்கும் காமன்வெல்த் போட்டி வளாகத்தில் நுழைய பயிற்சியாளர் சந்தியாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக குத்துச்சண்டை வீராங்கனை கூறினார்.

அவர் பல முறை கேட்டுக்கொண்டும், அவர்கள் சில காரணங்களை மேற்கோள் காட்டி பயிற்சியாளர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனை அடுத்து ஒரு பயிற்சியாளர் மீண்டும் தாயகம் திரும்பிவிட்டார். இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் இன்று கூறினார்.

இதனை அடுத்து தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அவருடைய பயிற்சியாளரின் அனுமதிக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் தெரிவித்திருப்பதாவது, குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைனின் தனிப்பட்ட பயிற்சியாளர் சந்தியா குருங்கிற்கு உரிய அங்கீகாரம் மற்றும் அனுமதி அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் குத்துச்சண்டை வீராங்கனை தன் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற வழி வகுக்கும் என்று தெரிவித்துள்ளது.

இவ்விவகாரத்தில் மந்திரி அனுராக் தாகுர் தலையிட்டு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வலியுறுத்தியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுடன் தொடர்பில் இருக்குமாறும், கூடிய விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என மந்திரி அனுராக் தாகுர் அறிவுறுத்தியுள்ளார்.

வீரர்கள் மற்றும் குழுவினர் தங்கியிருக்கும் காமன்வெல்த் போட்டி வளாகத்தில் நுழைய உரிய அங்கீகாரம் மற்றும் அனுமதியை பயிற்சியாளர் சந்தியாவுக்கு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story