உலகக்கோப்பை கிரிக்கெட் : ஜிம்பாப்வே அணியின் மோசமான சாதனையை சமன் செய்த இலங்கை அணி...!


உலகக்கோப்பை கிரிக்கெட் : ஜிம்பாப்வே அணியின் மோசமான  சாதனையை சமன் செய்த இலங்கை அணி...!
x
தினத்தந்தி 17 Oct 2023 2:27 AM GMT (Updated: 17 Oct 2023 2:32 AM GMT)

ஜிம்பாப்வே அணியின் மோசமான சாதனையை இலங்கை அணி சமன் செய்துள்ளது.

லக்னோ,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை 209 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆனால் இலங்கை அணி ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விகளின் மூலம் இலங்கை அணி ஒரு மோசமான சாதனையை சமன் செய்துள்ளது.

இதில் உலகக்கோப்பை தொடரில் அதிக தோல்விகளை பெற்று முதலிடத்தில் இருந்த ஜிம்பாவே அணியின் சாதனையை இலங்கை சமன் செய்துள்ளது. இரு அணிகளும் இதுவரை 42 தோல்விகளை பதிவு செய்துள்ளன. இதற்கு அடுத்ததாக மேற்கு இந்திய தீவுகள் அணி உள்ளது. இந்த அணி 35 தோல்விகளை சந்தித்துள்ளது.


Next Story