மாநில வாள்வீச்சு போட்டி சென்னையில் இன்று தொடக்கம்


மாநில வாள்வீச்சு போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
x

கோப்புப்படம்

தமிழ்நாடு மாநில வாள்வீச்சு சங்கம் சார்பில் மாநில சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி இன்றும் நாளையும் நடக்கிறது.

சென்னை,

தமிழ்நாடு மாநில வாள்வீச்சு சங்கம் சார்பில் மாநில சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க் மைதானத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடக்கிறது.

இதில் முதல் நாளில் பெண்களுக்கான போட்டியும், 2-வது மற்றும் கடைசி நாளில் ஆண்களுக்கான போட்டியும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மராட்டிய மாநிலம் புனேயில் வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறும் தேசிய சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் இடைக்கால கமிட்டி கன்வீனர் வி.கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.


Next Story