புதுவை: ஆண்கள்-பெண்களுக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி


புதுவை: ஆண்கள்-பெண்களுக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி
x

புதுச்சேரி, ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் ஆண்கள்-பெண்களுக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி

புதுச்சேரி:

புதுவை உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் புதுச்சேரி அமெச்சூர் குத்துசண்டை சங்கம் சார்பில் ஆண்கள்-பெண்களுக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் 150 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

போட்டிகளை புதுவை மத்திய கலால்துறை கண்காணிப்பாளர் மிருதஞ்சய் சிங் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், வக்கீல் கலியபெருமாள், புதுவை குத்துசண்டை சங்க தலைவர் விக்டன் ஜெகநாதன் அம்புரோஸ், பொதுச்செயலாளர் கோபு, துணைத்தலைவர் பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.


Next Story