கூடலூரில் மாநில கைப்பந்து போட்டி: தமிழக அணி வெற்றி


கூடலூரில் மாநில கைப்பந்து போட்டி: தமிழக அணி வெற்றி
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்று சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்று சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

கைப்பந்து போட்டி

இளைஞர்களின் உடல் திறனை மேம்படுத்தவும், சமுதாயத்தில் நிலவும் தவறான பழக்கவழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூடலூர் 1-ம் மைல் விளையாட்டு மைதானத்தில் கடந்த 11-ம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் 25 அணிகள் கலந்து கொண்டது.

விளையாட்டு வீரர் சிவா கொடியேற்றி வைத்தார். கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, துணை தலைவர் சிவராஜ் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இறுதிப் போட்டியில் பாரம், கோத்தகிரி அணிகள் மோதியது. இறுதியாக கோத்தகிரி அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 12-ந் தேதி மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

தமிழக அணி வெற்றி

இதில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக அணிகள் மோதியது. தொடர்ந்து இறுதி போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து சுழற் கோப்பை வழங்கப்பட்டது. இதில் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி சூண்டியில் மாவட்ட அளவிலான கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் 55 அணிகள் கலந்து கொண்டது. இறுதிப் போட்டிக்கு சூண்டி மற்றும் ஆரோட்டுப்பாறை அணிகள் மோதியது. இதில் சூண்டி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. பின்னர் சூண்டி அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கத் தொகை, 8 அடி கோப்பை வழங்கப்பட்டது. 2-ம் இடத்தைப் பிடித்த ஆரோட்டுப்பாறை அணிக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.


1 More update

Next Story