மாணவர்கள் சாதனை


மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 1 Dec 2022 6:45 PM GMT (Updated: 1 Dec 2022 6:46 PM GMT)

கலாசார மற்றும் விளையாட்டு போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்

தென்காசி

சுரண்டை:

மதுரை குயின்மிரா பள்ளியில் கலை கலாசார மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்றனர். குழந்தை பிரிவில் குழு நடனத்தில் முதல் பரிசு, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான நடனத்தில் 2-ம் பரிசு, தபால்தலை வடிவமைத்தல், ஊமை நாடகத்தில் முதல் பரிசு, காய்கறி வைத்து உருவம் உருவாக்குதலில் 2-ம் பரிசு, பூச்செண்டு உருவாக்குதலில் 3-ம் பரிசு பெற்றுள்ளனர். 1 முதல் 5-ம் வகுப்பு பிரிவில் 3-ம் இடமும், 6 முதல் 8 பிரிவில் முதலிடமும் பிடித்தனர்.

மேலும் 19 மாணவ-மாணவிகள் பெங்களூரு இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல தேர்வு செய்யப்பட்டனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளி செயலாளா் சிவ டிப்ஜினிஸ்ராம், பள்ளி முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிரியா் மாரிக்கனி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.


Next Story