கோத்தகிரியில் கோடைகால விளையாட்டு பயிற்சி


கோத்தகிரியில் கோடைகால விளையாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 11 May 2023 12:30 AM IST (Updated: 11 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் கோடைகால விளையாட்டு பயிற்சி

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி காந்தி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நீலகிரி மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் கோடைகால பள்ளி விடுமுறை நேரத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கு இலவசமாக பயிற்சி முகாம் நடத்தப்பட்டு அதில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பயிற்சி முகாம் கடந்த 8 ஆம் தேதி துவங்கியது. இதில் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த சுமார் 80 சிறுவர், சிறுமிகள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பு பயிற்சியாளர்கள் மோகன் குமார், ராஜ்குமார், காரி ஆகியோர் பயிற்சியளித்து வருகின்றனர். இந்த பயிற்சி முகாம் வருகிற 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. முகாமில் பங்கேற்றுள்ளவர்களுக்கு தினமும் பழம், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. நிறைவு நாளில் அவர்களனைவருக்கும் சான்றிதழ்களும், விளையாட்டு சீருடையும் வழங்கப்படவுள்ளது.

1 More update

Next Story