சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் பி.வி.சிந்து தோல்வி- தொடரிலிருந்து வெளியேறினார்
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.சி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.சி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
அவர் 2-வது சுற்றில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமாவர்தானியிடம் 15-21, 21-12, 18-21 என்ற செட் கணக்கில் தோற்றார். ஏற்கனவே இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரனாய், மிதுன், மஞ்சுநாத் ஆகியோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தோற்றனர். இதன் மூலம் சுவிஸ் ஓபன்பேட்மின்டனில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story