சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி: சாத்விக்-சிராக் ஜோடி இறுதிசுற்றுக்கு முன்னேற்றம்


சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி: சாத்விக்-சிராக் ஜோடி இறுதிசுற்றுக்கு முன்னேற்றம்
x

சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி அரைஇறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

பாசெல்,

சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை, மலேசியாவின் ஓங் யிவ் சின்-டியோ யி ஜோடியை சந்தித்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-19, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த வெற்றியை பெற்ற சாத்விக்-சிராக் ஜோடிக்கு 69 நிமிடங்கள் தேவைப்பட்டது.


Next Story