சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி - முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி


சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி - முதல் சுற்றில்  இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி
x

பி.வி.சிந்து 21-9, 21-16 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பாசெல்:

சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சுவிட்சர்லாந்தின் ஸ்டாடில்மென்னை சந்தித்தார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-9, 21-16 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 18-21, 11-21 என்ற நேர் செட்டில் லீக் சேக் லியிடம் (ஹாங்காங்) தோல்வியடைந்தார்.Next Story