தைபே ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பிரனாய், காஷ்யப் அபாரம்

Prannoy HS (image courtesy: BAI Media via ANI)
தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனதைபேயில் நடந்து வருகிறது.
தைபே,
தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனதைபேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-11, 21-10 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லின் யு சின்னை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 26 நிமிடமே தேவைப்பட்டது.
இதே போல் இந்தியாவின் காஷ்யப் 21-15, 21-16 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் சாமுவேல் ஹியோவை விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சங்கர் 13-21, 5-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் கன்டா சுன்யமாவிடம் தோற்று வெளியேறினார்.
Related Tags :
Next Story






