தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதி ஆட்டத்தில் கரோலினா மரின் தோல்வி


தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதி ஆட்டத்தில் கரோலினா மரின் தோல்வி
x

அரைஇறுதி சுற்றில் 3 முறை உலக சாம்பியனான கரோலினா மரின் தோல்வி அடைந்தார்.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் லக்ஷயா சென், 5-ம் நிலை வீரர் தாய்லாந்தின் குன்லாவுத் விதித்சர்னை எதிர்கொண்டார்.

முதல் செட்டை வசப்படுத்திய லக்ஷயா சென், அடுத்த இரு செட்டுகளில் தடுமாறி வீழ்ந்தார். 1 மணி 15 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் குன்லாவுத் 13-21, 21-17, 21-13 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென்னை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.


இதையடுத்து பெண்கள் பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் தென்கொரியாவைச் சேர்ந்த 2-ம் நிலை வீராங்கனை அன்சே யங்கை, 3 முறை உலக சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-16, 21-12 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை வீழ்த்தி அன்சே யங் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.


Next Story