9-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் 7-ல் தொடக்கம்


9-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் 7-ல் தொடக்கம்
x

புரோ கபடி லீக்கின் 9-வது சீசன் அக்டோபர் 7-ல் தொடங்க உள்ளது.


புரோ கபடி லீக் தொடர் கபடி போட்டியை மக்களிடம் பிரபலப்படுத்து வகையில் கடந்த 2014- ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது வரை 8 புரோ கபடி சீசன்கள் முடிந்துள்ளன. கடந்த சீசனில் தபாங் டெல்லி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் புரோ கபடி லீக்கின் 9-வது சீசன் அக்டோபர் 7-ல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 9-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஆகஸ்ட்- 5 மற்றும் 6-ந் தேதிகளில் நடைபெற்றது. அந்த வீரர்களில் பவான் செராவத் ரூ.2.26 கோடிக்கு தமிழ் தலைவாஸ் அணி வாங்கியது. விகாஸ் கன்டோலாவை ரூ.1.7 கோடிக்கு பெங்களூரு புல்சும், பாஸல் அட்ராசலியை ரூ.1.38 கோடிக்கு புனேரி பால்டனும் எடுத்தது.

புரோ கபடி லீக்கின் 9-வது சீசன் அக்டோபர் 7-ல் தொடங்கி டிசம்பர் மாதம் முடிவடையும் என கூறப்படுகிறது. தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஹைதரபாத் நகரங்களில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடர் குறித்து அனுபம் கோஸ்வாமி (தலைவர் - ஸ்போர்ட்ஸ் லீக்ஸ், மாஷால் ஸ்போர்ட்ஸ் மற்றும் லீக் கமிஷனர், புரோ கபடி லீக்) கூறுகையில்,

கபடி போட்டியை அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கு கொண்டு செல்லும் நோக்குடன் புரோ கபடி தொடர் தொடங்கப்பட்டது. தொடரின் 8-வது சீசன் கொரோனா காலக்கட்டத்திலும் பயோ-பப்பிள் மூலம் நடத்தப்பட்டது. அடுத்து 9-வது சீசனை ஆவலுடன் எதிபார்க்கிறோம். ஏனெனில் எங்கள் ரசிகர்கள் பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் முழுவதும் உள்ள மைதானங்களுக்குத் திரும்பி வந்து தங்களுக்குப் பிடித்த அணிகள் மற்றும் நட்சத்திரங்களின் கபடி ஆட்டத்தை பார்க்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story