முன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கும் கிராண்ட்பிரி தடகள போட்டி - சென்னையில் இன்று நடக்கிறது
2-வது இந்தியன் கிராண்ட்பிரி தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
சென்னை,
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், இந்திய தடகள சம்மேளனத்தின் ஆதரவுடன் 2-வது இந்தியன் கிராண்ட்பிரி தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிமை) நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடக்கும் இந்த போட்டியில் இரு பாலருக்கும் 200, 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம், 1,500, 5,000 மீட்டர் ஓட்டம், போல்வால்ட், டிரிபிள் ஜம்ப், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய பந்தயங்கள் இடம் பெறுகிறது.
பாரீஸ் ஒலிம்பிக்குக்கான தகுதி சுற்றுகளில் ஒன்றான இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஷ், அவினாஷ், முகமது சலாலுதீன், வித்யா ராம்ராஜ், ரோசி மீனா, பவித்ரா வெங்கடேஷ், பரனிகா இளங்கோவன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.