தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா - டெல்லியில் இன்று நடக்கிறது


தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா - டெல்லியில் இன்று நடக்கிறது
x

தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடக்கிறது.

புதுடெல்லி,

சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.

கேல் ரத்னா விருதுக்கு தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேர்வு செய்யப்பட்டார். இதே போல் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா உள்பட 25 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வாகினர்.

கேல் ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.


Next Story