தேனியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள்


தேனியில்  மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள்
x

தேனியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றன

தேனி

தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் 36-வது மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் தேனியில் நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை தாங்கினார். போட்டிகளை தமிழ்நாடு கிராம வங்கியின் தேனி கிளை மேலாளர் பவித்ரா தொடங்கி வைத்தார். வயது வாரியாக 2 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு செஸ் போட்டிகளுக்கான நடுவரும், அகாடமி தலைவருமான சையது மைதீன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

1 More update

Next Story