பல்கலைக்கழக பேட்மிண்டன்: எஸ்.ஆர்.எம். அணி 'சாம்பியன்'


பல்கலைக்கழக பேட்மிண்டன்: எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்
x

கோப்புப்படம்

பல்கலைக்கழக பேட்மிண்டன் போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை,

தென் மண்டல பல்கலைக்கழக பேட்மிண்டன் போட்டி பெங்களூவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 3-2 என்ற கணக்கில் ஜெயின் பல்கலைக்கழகத்தை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதன் மூலம் எஸ்.ஆர்.எம். அணி அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிக்கு தகுதி பெற்றது.


Next Story