உலக தடகள சாம்பியன்ஷிப்: தொடர் ஓட்டம் பிரிவில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


உலக தடகள சாம்பியன்ஷிப்: தொடர் ஓட்டம் பிரிவில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர் ஓட்டம் பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

புடாபெஸ்ட்,

19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வருகிறது.

இதில், ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்ட பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றிபெறும் அணிகள் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்நிலையில், ஆண்கள் தொடர் ஓட்ட தகுதிச்சுற்று போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இறுதிப்போட்டிக்குள் நுழையும் தகுதிச்சுற்று போட்டி நேற்று நடைபெற்றது.

இதில், இந்திய அணியில் முகமது அனஸ் யஹியா, அமொஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் வரியத்தொடி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

போட்டி தொடங்கியது முதல் இந்திய வீரர்கள் அதிவேகத்தில் இலக்கை நோக்கி ஓடத்தொடங்கினர். அதன்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்திய அணி 2 நிமிடம் 59.05 விநாடிகளில் அடைந்து 2ம் இடம் பிடித்தது.

இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஆண்கள் தொடர் ஓட்டப்பிரிவு வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இலக்கை 2 நிமிடம் 59.05 விநாடியில் அடைந்து ஆசிய போட்டியில் இடம்பெற்றிருந்த சாதனையை முறியடித்தது. இப்போட்டியில் அமெரிக்கா இலக்கை 2 நிமிடம் 58.05 விநாடியில் அடைந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

இங்கிலாந்து 3ம் இடத்தையும், ஜமைக்கா 4ம் இடத்தையும் பிடித்துள்ளது. உலக தடகள சாம்பியன்ஷிப் 4x400 தொடர் ஓட்டப்பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.


1 More update

Next Story