உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு முதல் தங்கம்


உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்  : இந்தியாவுக்கு முதல் தங்கம்
x
தினத்தந்தி 4 Aug 2023 2:30 PM GMT (Updated: 4 Aug 2023 2:39 PM GMT)

பெர்லினில் நடக்கும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முதல் தங்கத்தை வென்றது


பெர்லின் ,

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின், பெர்லினில் நடந்து வருகிறது . இதில் இதில் கூட்டு பெண்கள் பிரிவின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இந்தியாவின் ஜோதி சுரேகா , அதிதி சுவாமி , பர்னீத் கவுர் , மெக்சிகோ அணியான டாப்னே குயின்டெரோ, அனா சோபியா ஹெர்னாண்டஸ் ஜியோன் , ஆண்ட்ரியா பெசெரா ஆகியோரை எதிர்கொண்டனர் .

இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் மூவரும் சிறப்பாக செயல்பட்டனர் . இதனால் 235 -229 என்ற புள்ளி கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி இந்திய அணியினர் தங்கம் வென்றனர்


Next Story