உலக தடகள சாம்பியன்ஷிப்: தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 5-வது இடம்

கோப்புப்படம் ANI
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 5-வது இடத்தைப் பிடித்தது.
புடாபெஸ்ட்,
கடந்த 19-ந் தேதி தொடங்கிய உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது.
இதில் நேற்று முன்தினம் இரவு ஆண்கள் அணிகளுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் தகுதி சுற்று நடந்தது. இதில் முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய குழுவினர் 2 நிமிடம் 59.05 வினாடிகளில் இலக்கை கடந்து 2-வது இடத்தை பிடித்து 8 அணிகளில் ஒன்றாக இறுதி சுற்றுக்குள் நுழைந்தனர்.
இந்த நிலையில் ஆண்கள் அணிகளுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்தது. இலக்கை 2 நிமிடம் 59.92 வினாடிகளில் கடந்த இந்திய வீரர்கள் 5-வது இடத்தைப் பிடித்தனர்.
Related Tags :
Next Story






