ஆலியா பட் என் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் - விருப்பம் தெரிவித்த நிகாத் ஜரீன்

Image Courtesy : BFI / Instagram Aliabhat
சமீபத்தில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நிகாத் ஜரீன் தங்கம் வென்றார்.
மும்பை,
12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. இந்த தொடரின் 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்றார்.
இதன்மூலம் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஐந்தாவது இந்திய வீராங்கனையானார் நிகாத் ஜரீன். தெலுங்கானாவை சேர்ந்த நிகாத் ஜரீன் 25, கடந்த 2019ல் தாய்லாந்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று இருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவரிடம் எப்போதாவது அவரை பற்றிய ஒரு வாழ்க்கை வரலாறு எடுக்கப்பட்டால், அவரது கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நிகாத் ஜரீன், தனக்கு ஆலியா பட் மிகவும் பிடிக்கும் எனவும் அவர் தன்னுடைய கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.






