உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர் நிஷாந்த் அஜர்பைஜான் வீரரை வீழ்த்தினார்


உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர் நிஷாந்த் அஜர்பைஜான் வீரரை வீழ்த்தினார்
x

அரியானாவை சேர்ந்த நிஷாந்த் தேவ் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

தாஷ்கென்ட்,

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 71 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ், 2021-ம் ஆண்டு உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற அஜர்பைஜான் வீரர் சார்கான் அலியெவ்வை சந்தித்தார்.

இதில் அரியானாவை சேர்ந்த 22 வயதான நிஷாந்த் தேவ் அருமையாக குத்துவிட்டு ஆதிக்கம் செலுத்தியதுடன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அடுத்து அவர் தென்கொரியா வீரர் லீ சாங்மினை சந்திக்கிறார்.


Next Story