உலக ஜூனியர் தடகளம்: தமிழக வீரர் செல்வபிரபு வெள்ளி வென்றார்


உலக ஜூனியர் தடகளம்: தமிழக வீரர் செல்வபிரபு வெள்ளி வென்றார்
x

உலக ஜூனியர் தடகளத்தில் தமிழக வீரர் செல்வபிரபு வெள்ளி வென்றார்.

கலி,

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) கொலம்பியாவின் கலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிட்டியது.

ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் (மும்முறை தாண்டுதல்) மதுரையைச் சேர்ந்த 17 வயதான செல்வபிரபு 16.15 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஜமைக்காவின் ஜெய்டன் ஹிப்பெர்ட் 17.27 மீட்டர் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். இந்த தொடரில் இந்தியா 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் மொத்தம் 3 பதக்கம் பெற்றுள்ளது.


Next Story