உலக ஜூனியர் ஸ்குவாஷ்: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சவுரியா

Image : X@indiasquash
இந்திய வீரர் சவுரியா பவா, முதல் நிலை வீரரான முகமது ஜகாரியாவை (எகிப்து) சந்தித்தார்.
ஹூஸ்டன்,
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரியா பவா, முதல் நிலை வீரரான முகமது ஜகாரியாவை (எகிப்து) சந்தித்தார்.
41 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சவுரியா பவா 5-11, 5-11, 9-11 என்ற நேர்செட்டில் ஜகாரியாவிடம் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். இதன் மூலம் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற சிறப்பை பவா பெற்றார்.
Related Tags :
Next Story






