பால் வியாபாரிக்கு அடி-உதை- 2 பேர் கைது


பால் வியாபாரிக்கு அடி-உதை- 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2023 3:44 AM IST (Updated: 18 Jan 2023 4:05 PM IST)
t-max-icont-min-icon

பால் வியாபாரியை அடித்து உதைத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

சிவந்திப்பட்டி:

பாளையங்கோட்டை அருகே உள்ள இலந்தைகுளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 18). இவர் சிவந்திபட்டியில் பால் கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இசக்கிபாண்டி சிவந்திபட்டி, நடுத்தெரு பகுதியில் பால் எடுத்துக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த சிவந்திபட்டியை சேர்ந்த மாரிமுத்து (20), சேரன்மகாதேவி கூனியூரை சேர்ந்த சேதுராமன் (23) ஆகிய இருவரும் சேர்ந்து எங்கள் ஊரில் வந்து எப்படி பால் எடுக்கலாம்? என அவதூறாக பேசி அடித்து உதைத்து காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இசக்கிபாண்டி சிவந்திபட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாரிமுத்து, சேதுராமன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தார்.


Next Story