அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: மெட்விடேவ் கால்இறுதிக்கு தகுதி


அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: மெட்விடேவ் கால்இறுதிக்கு தகுதி
x

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரில் ரஷிய வீரர் மெட்விடேவ் கால்இறுதிக்கு முன்னேறினார்.

அடிலெய்டு,

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான டேனில் மெட்விடேவ் (ரஷியா) 6-0, 6-3 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 29-வது இடத்தில் இருக்கும் மியோமிர் கெமனோவிச்சை (செர்பியா) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் கரென் கச்சனோவ் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் ஜாக் டிராபெரை (இங்கிலாந்து) வீழ்த்தினார். கால்இறுதியில் மெட்விடேவ்-கச்சனோவ் மோதுகிறார்கள். இதே போல் ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகா 6-4, 6-3 என்ற நேர்செட்டில் மெக்கன்சி மெக்டொனால்டை (அமெரிக்கா) வீழ்த்தி கால்இறுதியை எட்டினார்.


Next Story