அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்யக் கால்இறுதிக்கு முன்னேற்றம்


அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்யக் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy : @AdelaideTennis twitter

உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்யக் விம்பிள்டன் சாம்பியனான எலினா ரைபகினாவை தோற்கடித்து கால்இறுதியை எட்டினார்.

அடிலெய்டு,

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 7-6 (10-8), 7-6 (7-3) என்ற நேர்செட்டில் லுட்மிலா சாம்சோனாவாவை (ரஷியா) சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.

செக்குடியரசு வீராங்கனை வான்டர்சோவா 6-0, 6-4 என்ற நேர்செட்டில் கனேபியையும் (எஸ்தோனியா), ரஷியாவின் வெரோனிகா குடெர்மிடோவா 6-4, 6-0 என்ற செட் கணக்கில் பியான்கா ஆன்ட்ரீஸ்குவையும் (கனடா) விரட்டினர்.

மற்றொரு ஆட்டத்தில் தகுதிநிலை வீராங்கனையான மார்டா கோஸ்யக் (உக்ரைன்) சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (5-7), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் விம்பிள்டன் சாம்பியனான எலினா ரைபகினாவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்து கால்இறுதியை எட்டினார். இந்த ஆட்டம் 2 மணி 21 நிமிடங்கள் நீடித்தது.


Next Story