ஆசிய டேபிள் டென்னிஸ்: வெண்கலம் வென்றது இந்திய ஆண்கள் அணி...!!


ஆசிய டேபிள் டென்னிஸ்: வெண்கலம் வென்றது இந்திய ஆண்கள் அணி...!!
x

அரையிறுதியில் இந்திய அணி, சீன தைபே அணியை எதிர்கொண்டது.

யோங்க் சாங்,

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் தென்கொரியாவின் யோங்க் சாங் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் அணிக்கான அரையிறுதியில் இந்திய அணி சீன தைபே அணியை எதிர்கொண்டது. இந்திய அணியில் சரத் கமல், ஜி. சத்தியன் மற்றும் ஹர்ப்ரீத் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

சரத் கமல் சுயாங் சி-யுயானை எதிர்கொண்டார். இதில் சரத் கமல் 6-11, 6-11, 9-11 என தோல்வியடைந்தார். சத்தியன் 5-11, 6-11, 10-12 என லின் யுன்-ஜுவிடம் தோல்வியடைந்தார். ஹர்ப்ரீத் 6-11, 7-11, 11-7, 9-11 என தோல்வியடைந்தார். இதனால் இறுதி வாய்ப்பை இழந்த இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்தோடு விடைபெற்றது.

1 More update

Next Story