ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஆண்ட்ரே ரூப்லெவ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஆண்ட்ரே ரூப்லெவ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image Courtesy: @AustralianOpen

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ரூப்லெவ் 6-2, 7-6 ( 8-6), 6-4 என்ற செட் கணக்கில் செபாஸ்டியன் கோர்டாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். வரும் 21ம் தேதி நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை ரூப்லெவ் எதிர்கொள்ள உள்ளார்.


Next Story