ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய கோகோ காப்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய கோகோ காப்
x

image courtesy; AFP

தினத்தந்தி 24 Jan 2024 3:48 AM GMT (Updated: 24 Jan 2024 4:00 AM GMT)

கோகோ காப் அரையிறுதியில் சபலென்கா உடன் மோத உள்ளார்.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவருமான கோகோ காப் (அமெரிக்கா), மார்டா கோஸ்ட்யுக் (உக்ரைன்) உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதல் இரு செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில் கடைசி செட்டை கோகோ காப் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

3 மணிநேரம் 8 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் கோகோ காப் 7-6 , 6-7 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் கோஸ்ட்யுக்கை வெளியேற்றி ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார். கோகோ காப் அரையிறுதியில் சபலென்கா உடன் மோத உள்ளார்.


Next Story
  • chat