ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி
x

Image Courtesy: @AustralianOpen

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் இத்தாவிலியின் ஜன்னிக் சின்னரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரூப்லெவ் 4-6, 6-7 (5-7), 3-6 என்ற செட் கணக்கில் ஜன்னிக் சின்னரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு காலிறுதியோடு வெளியேறினார். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய சின்னர் அரையிறுதியில் ஜோகோவிச்சை எதிர்கொள்ள உள்ளார்.


Next Story
  • chat