பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: மார்ட்டின் எட்செவிரி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
பார்சிலோனா,
களிமண் தரை போட்டியான பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகக் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் கேஸ்பர் ரூட் (நார்வே) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மேட்டியோ அர்னால்டியை (இத்தாலி) விரட்டி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் தாமஸ் மார்ட்டின் எட்செவிரி (அர்ஜென்டினா) 7-6 (7-4), 7-6 (7-1) என்ற நேர் செட்டில் கேமரூன் நோரியை (இங்கிலாந்து) போராடி வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 29 நிமிடங்கள் தேவைப்பட்டது.
Related Tags :
Next Story






