பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Image Courtesy: AFP
களிமண் தரை போட்டியான பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
பார்சிலோனா,
களிமண் தரை போட்டியான பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் கிரேக்க வீரர் சிட்சிபாஸ், செர்பியாவின் டுசான் லாஜோவிக்கை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் முதல் செட்டை 5-1 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த சிட்சிபாஸ் அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் செர்பியாவின் டுசான் லாஜோவிக்கை வீழ்த்தி சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சிட்சிபாஸ் மற்றும் நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் மோத உள்ளனர். இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
Related Tags :
Next Story






