பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர்; எலெனா ரைபகினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!


பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர்; எலெனா ரைபகினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!
x

Image Courtesy: AFP

இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பிரிஸ்பேன்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா, செக்குடியரசு வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6-2 என்ற கணக்கில் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தி எலெனா ரைபாகினா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா - விக்டோரியா அசரென்கா ஆகியோர் மோதினர். இதில் விக்டோரியா அசரென்காவை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அரினா சபலென்கா வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா - எலெனா ரைபாகினா ஆகியோர் மோத உள்ளனர்.


Next Story