சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்


சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம்

இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு இந்திய வீரர் முகுந்த் சசிகுமார் முன்னேறியுள்ளார்.

சென்னை,

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சகெத் மைனெனி- ராம்குமார் ஜோடி 4-6, 6-4, 10-6 என்ற செட் கணக்கில் பிரான்சின் டான் ஆட்- பிளான்சேத் இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் 2-வது ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முகுந்த் சசிகுமார் 7-6 , 6-3 என்ற நேர் செட்டில் மோஸ் இசார்குவை (துனிசியா) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.


Next Story