சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
x

image courtesy;AFP

தினத்தந்தி 20 Aug 2023 5:47 AM GMT (Updated: 20 Aug 2023 5:59 AM GMT)

அல்காரஸ் அரையிறுதியில் ஹூபர்ட் ஹர்காக்சை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், போலந்து வீரர் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அல்காரஸ் முதல் செட்டை 2-6 என இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 2-வது செட்டை டை பிரேக்கரில் கைப்பற்றினார். பின் கடைசி செட்டை எளிதில் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். திரில்லிங்காக நடைபெற்ற இந்த போட்டியில் அல்காரஸ் 2-6, 7-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


Next Story