சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்...!


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்...!
x

Image Courtesy: @CincyTennis

தினத்தந்தி 19 Aug 2023 1:59 AM GMT (Updated: 19 Aug 2023 11:23 AM GMT)

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்பர்செல்லை எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என கைப்பற்றி அல்காரஸ்-க்கு அதிர்ச்சி அளித்த மேக்ஸ்பர்செல் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் இழந்தார். இதையடுத்து 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மேக்ஸ்பர்செல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ். அரையிறுதி ஆட்டத்தில் போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் அல்காரஸ் மோத உள்ளார்.


Next Story