சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்...!


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்...!
x

Image Courtesy: @CincyTennis

தினத்தந்தி 21 Aug 2023 2:56 AM GMT (Updated: 21 Aug 2023 6:06 AM GMT)

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸூம், நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளி கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார். இதன் பின்னர் தனது தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 7-6 (9-7), 7-6 (7-4) என்ற புள்ளி கணக்கில் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார்.

இறுதியில் ஜோகோவிச் 5-7, 7-6 (9-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் கோகோ காப் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கரோலினா முச்சோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.


Next Story