சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சானியா மிர்சா - லூசி ஹ்ரடேக்கா ஜோடி தோல்வி..!


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சானியா மிர்சா - லூசி ஹ்ரடேக்கா ஜோடி தோல்வி..!
x

கோப்புப்படம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சானியா மிர்சா - லூசி ஹ்ரடேக்கா ஜோடி தோல்வியடைந்தது.

பாரீஸ்,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆப் 16 சுற்றில் சானியா மிர்சா (இந்தியா) - லூசி ஹ்ரடேக்கா (செக்குடியரசு) ஜோடி, ஜெலினா ஓஸ்டாபென்கோ (லாட்வியா) - லியுட்மிலா கிச்செனோக் (உக்ரைன்) ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் 2-6, 4-6 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா -லூசி ஹ்ரடேக்கா ஜோடி ஜெலினா-கிச்செனோக் ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது.


Next Story