சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் செரீனா தோல்வி


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் செரீனா தோல்வி
x

அமெரிக்க ஓபனுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற செரீனா வில்லியம்ஸ் திட்டமிட்டுள்ளார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), எம்மா ரடுகானுவிடம் (இங்கிலாந்து) மோதினார்.

தொடக்கம் முதலே தடுமாற்றத்திற்குள்ளான செரீனா 4-6, 0-6 என்ற நேர்செட்டில் 19 வயதான எம்மா ரடுகானுவிடம் பணிந்தார். இந்த மாதம் இறுதியில் நடைபெறும் அமெரிக்க ஓபனுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ள 40 வயதான செரீனா வில்லியம்ஸ் கடந்த வாரம் கனடா ஓபன் டென்னிஸ் போட்டியிலும் தொடக்க சுற்றிலேயே நடையை கட்டியது நினைவுகூரத்தக்கது.

இதேபோல் 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 4-6, 5-7 என்ற நேர்செட்டில் சீனாவின் ஷாய் ஜாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.


Next Story