டேவிஸ் கோப்பை டென்னிஸ்; இத்தாலி அணி சாம்பியன்!


டேவிஸ் கோப்பை டென்னிஸ்; இத்தாலி அணி சாம்பியன்!
x

image courtesy; AFP

இத்தாலி அணி கோப்பையை வெல்வதில் ஜானிக் சின்னர் முக்கிய பங்கு வகித்தார்.

மலாகா,

கிரிக்கெட்டில் உலகக்கோப்பையைப் போன்று டென்னிஸில் டேவிஸ் கோப்பை போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை ஸ்பெயினில் இந்த தொடர் நடைபெற்றது.

இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி அணிகள் முன்னேறின. இதில் 2-0 என்ற கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இறுதிப்போட்டியில் இத்தாலி வீரரான ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை 6-3 6-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

1976ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தாலி அணி டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story