பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் சாம்பியன்...!


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் சாம்பியன்...!
x

Image Courtesy: @rolandgarros

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரையில் அரங்கேறும் இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இகா ஸ்விடெக் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்நிலையில் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிக் மற்றும் நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர். இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிக் 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
Next Story